கா-குடி அஷ்-ஷூஹதா வித்தியாலய அதிபர் எம்.ஏ.சி.எம்.பதுறுதீன் அதிபர் தரம் 1க்கு பதவி உயர்வு - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Saturday, October 05, 2013

கா-குடி அஷ்-ஷூஹதா வித்தியாலய அதிபர் எம்.ஏ.சி.எம்.பதுறுதீன் அதிபர் தரம் 1க்கு பதவி உயர்வு


(பழுலுல்லாஹ் பர்ஹான்)

காத்தான்குடி -2 ஆம் குறிச்சி பிரதேசத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அதிபர்  மர்ஹ_ம் எம்.எம்.எம்.அப்துல் காதர் மற்றும் ஆமினா தம்பதிகளின் மகன் அல்ஹாஜ் எம்.ஏ.சி.எம்.பதுறுதீன் ஜேபி அதிபர் தரம்  1க்கு பதவி உயர்வு பெற்றுள்ளார்.


அண்மையில் கல்வி அமைச்சினால் இடம்பெற்ற வைபவத்தில் கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தனவினால் ,இவருக்கான பதவி உயர்வுக் கடிதம் வழங்கப்பட்டது.

காத்தான்குடி ஹிழ்றிய்யா பள்ளிவாயல் பிரதித்தலைவரும்,கா-குடி அஷ்-ஷூஹதா வித்தியாலய அதிபருமான இவர் இளமைக் கல்வியை மட்-மெத்தைப் பள்ளி வித்தியாலயம்,மட்-ஹிழ்றியா வித்தியாலயம் ஆகியவற்றிலும் ,உயர் கல்வியை கா-குடி மத்திய மகா வித்தியாலயம்,ஜாமிஆ நழீமிய்யா கலாபீடம் ஆகியவற்றிலும் பெற்றுக்கொண்டார்.

மட்-மெதடிஸ்த மத்திய கல்லூரி,கல்முனை ஸாஹிறா கல்லூரி ஆகிய கல்லூரிகளில் ஆசிரியராகவும்,கா-குடி மெத்தைப் பள்ளி வித்தியாலயம்,மட்.ஒள்ளிக்குளம் அல் ஹம்றா வித்தியாலயம்,மட்-அல்ஹிறா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் அதிபராகவும் கடமையாற்றிய இவர் தற்போது காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் கல்விக்குழு உறுப்பினராகவும் கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post Top Ad