வாகரை புதிய பனிச்சங்கேணிப் பாலம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Sunday, September 01, 2013

வாகரை புதிய பனிச்சங்கேணிப் பாலம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு (படங்கள் இணைப்பு)


(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்ட இலங்கை ஜனநாய சோசலிச குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மட்டக்களப்பு-திருக்கொண்டியாமடு –திருகோனமலை வீதியில் மஹிந்த சிந்தனை துரித கதி வீதி அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் ஜப்பான் அரசாங்கத்தின் முழு பங்களிப்பு மற்றும் உள்நாட்டு முதலீட்டில் 1060 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட வாகரை புதிய பனிச்சங்கேணிப் பாலத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மக்கள் பாவனைக்காக உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.


வீரம் மிகு தலைமைத்துவத்தின் கீழ் பெருமைமிக்க தாயகம் அடுத்த தசாப்தத்தின் முன்னேற்றத்தை நோக்கி எனும் தொனிப் பொருளில் இடம்பெற்ற இம் மாபெரும்; நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத், துறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் திட்ட அமைச்சர் நிர்மல கொத்தலாவல ,ஜப்பான் நாட்டு தூதுவர் நொபுஹித்தோ ஹோபோ,இலங்கை பொலிஸ் மா அதிபர் என்.கே.இளங்க கோன்,இலங்கை மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவார்ட் கப்ரால்,உற்பத்தி திறன் திறன் அபிவிருத்தி அமைச்சர் பஷீர் சேகுதாவூத்,கிழக்கு மாகாண அளுனர் மொஹான் விஜயவிக்ரம,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்,மீள் குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்,திணைக்கள தலைவர்கள்,இரானுவ பொலிஸ் உயரதிகாரிகள் ,உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகள் ,மதப் பெரியார்கள் ,வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதநிதிகள் ,பெரும் திரளான பொது மக்கள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.

இந்த பாலம் அமைக்கப்பட்;டதன் மூலம் மட்டக்களப்பிலிருந்து திருகோணமலைக்கு மிகவும் குறுகிய நேரத்தில் பயனங்களை மேற்கொள்ள முடியும்.

கடந்த காலங்களில் இப்பிரதேசம் விடுதலை புலிகளின் கட்டுபாட்டில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.No comments:

Post Top Ad