இன்னொரு முஸ்லிம் முஜாஹித் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, September 30, 2013

இன்னொரு முஸ்லிம் முஜாஹித்

(அபு சய்யாப்) ர்னஸ் டீ சேகுவேரா பற்றி நாம் நிறையவே தெரிந்து வைத்துள்ளோம். ஆர்ஜன்டீனாவலில் பிறந்து வளர்ந்த மருத்துவர். கியூபாவின் விடுதலைக்காக பிடல் கஸ்ரோ, ரால்ப் கஸ்ரோ, காமிலோஸ் போன்ற தலைவர்களுடன் கியூபாவின் காடுகளில் அலைந்து திரிந்து போராடியவர். பின்னர் பொலீவிய விடுதலைக்காக போராட முற்பட்ட வேளை படுகொலை செய்யப்பட்டார். ஒரு விடுதலை போராளியாகவும், மனித நேயமிக்க கெரில்லா போராளியாகவும் புரட்சிகர விடுதலை இயக்கங்கள் அவரை இன்றும் போற்றுகின்றன. 

இன்னொரு முஸ்லிம் முஜாஹித் பற்றி இப்போது தெரிந்து கொள்வோம். அந்த விடுதலை போராளியின் பெயர் Dr. Abdul Fattah Numanயெமனில் பிறந்து வளர்ந்தவர். மருத்துவதுறையில் பிரபலமான டாக்டர். ஸன்னாவில் உள்ள மருத்துவ மனையில் டாக்டராக பணியாற்றியவர். சிரியாவில் நடந்த ஜிஹாதில் சஹீதாக்கப்பட்டவர். (இன்சாஅல்லாஹ்).

2011ல் சன்னாவில் நடந்த “Change Square” ஆர்ப்பாட்டங்களின் போது காயப்பட்டவர்களி்ற்கு மருத்துவ சிகிச்சைகளை புரியும் மொபைல் ஹொஸ்பிடலை  தலைமையேற்று நடாத்தினார். 

2012-ல் காஸாவிற்கு  தனது குழுவுடன் சென்று அங்கு இஸ்ரேலிய பாதுகாப்பு படைகளால் தாக்குதலிற்கு உள்ளாக்கப்பட்டு காயமடைந்த  பொது மக்களிற்கும், ஹமாஸின் போராளிகளிற்கும் உடனடி சத்திர சிகிச்சைகளை இரவு பகல் பாராது அயராது செய்து வந்தார். 

2013-ல் எகிப்திற்கு தனது உதவிகளை வழங்க விரைந்தார். “Rabaa El Adaweya” சதுக்கத்தில் ஜெனரல் சிசி நடாத்திய பாசிஸ படுகொலைகளில் காயமடைந்த எகிப்திய இஹ்வானிய சகோதரர்களிற்கு தொண்டர் மையமாக தற்காலிக ஆஸ்பத்திரியை நிறுவி அவர்களிற்கான சர்ஜரிகளை செய்து வந்தார். எகிப்திய இரகசிய பொலீஸார் இவரை தீர்த்துக்கட்ட தயாராகினர்..

மீண்டும் சிரியா நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்தார் டாக்டர் அப்துல் பதாஹ்ஃ நுஃமான். சிரிய சமர்க்களத்தில் காயமடைந்த முஜாஹித்களிற்கான வைத்திய சிகிச்சைகளை வழங்குவதில் முன்னணியில் திகழ்ந்தார். சமர்க்கள முனைகளில் வீழ்ந்து வெடிக்கும் செல்களிற்கு மத்தியில் அவர் தனது சத்திர சிகிச்சைகளை செய்து வந்தார். 

அலிபோவில் நடமாடும் ஹொஸ்பிடலை உருவாக்கி அலிபோ சமர்க்களத்தில் அளப்பரிய சேவைகளை ஆற்றினார் சகோதரர் நுஃமான். சிரிய பஸர் அல் அஸாதின் படையினர் அவரது அலிபோ ஆஸ்பத்திரி மீது நடாத்திய விமான குண்டு தாக்குதிலில் தனது இன்னுயிரை இறைவனிற்கு அர்ப்பணம் செய்தார் இந்த இனிய சகோதரர். 

களமுனையில் துப்பாக்கி ஏந்தி போராட முடியவில்லையே, எதிரியினால் தனக்கு இன்னும் மரணம் விளையவில்லையே!! என ஏங்கிய அவரது உள்ளத்திற்கு இசைவாக இறைவன் அவரின் மரணத்தை நிர்ணயித்து விட்டான். அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post Top Ad