சிரியா மீது பிரான்ஸ் தனியாக போர் தொடுக்காது ; பிரான்ஸ் அறிவிப்பு - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, September 02, 2013

சிரியா மீது பிரான்ஸ் தனியாக போர் தொடுக்காது ; பிரான்ஸ் அறிவிப்பு


சிரியாவில் அதிபர் பஷீர் அல் ஆசாதின் துருப்புகளுக்கும்,புரட்சியாளர்களுக்கும் இடையே கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக யுத்தம் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இதனால், லட்சக்கணக்கில் உயிர்ப்பலி ஏற்பட்டபோதிலும், உலகநாடுகள் சமாதானத்திற்கு முயற்சி செய்துவரும் போதிலும் பலன் எதுவும் கிட்டவில்லை. 


கடந்த மாதம் 21ஆம் தேதி நடைபெற்ற சண்டையில் சிரியா அரசு ரசாயன குண்டுகளை உபயோகித்தது குறித்து மற்ற நாடுகள் கண்டனம் தெரிவித்தன.அமெரிக்கா, பிரிட்டனுடன் இணைந்து சிரியா மீது போர் தொடுக்கத் தயாரானது.  

எனினும், பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் இந்தத் தாக்குதல் குறித்து தயக்கம் காட்டியுள்ளார்.பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து அவருக்குப் போதிய ஆதரவு கிட்டவில்லை என்பதே இதற்குக் காரணமாகும். 

இந்த நிலையில், தற்போது அமெரிக்காவின் மற்றொரு நட்பு நாடான பிரான்சின் உள்துறை அமைச்சர் மானுவல் வல்ஸ் தங்கள் நாடும் சிரியா மீது தனியாகப் போர் தொடுக்காது என்றும், அமெரிக்க நாடாளுமன்றத் தீர்மானத்திற்காகத் தாங்கள் காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.  

இதனிடையில், பிரான்சின் பிரதமர் ஜீன் மார்க் ஐரால்ட் இன்று தங்கள் நாட்டின் பாராளுமன்றத்தின் இரு அவைத் தலைவர்களையும், எதிர்க்கட்சித் தலைவர்களையும் சந்திக்க உள்ளார். சிரியாவின் நிலைமை பற்றி வரும் புதனன்று நடைபெற இருக்கும் விவாதம் குறித்து அவர் இன்று தீர்மானிக்க இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

No comments:

Post Top Ad