பலாலியில் வாகன விபத்தில் தலை சிதறி ஒருவர் பலி பொலிசாருக்கும் பொதுமக்களிடையே முறுகல் (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Tuesday, September 03, 2013

பலாலியில் வாகன விபத்தில் தலை சிதறி ஒருவர் பலி பொலிசாருக்கும் பொதுமக்களிடையே முறுகல் (படங்கள் இணைப்பு)

(மன வலிமை குறைந்தவர்கள் கீழுள்ள படங்களை பார்வையிட வேண்டாம்)

பலாலி வீதியில் இடம் பெற்ற மோட்டார் சையிக்கிள் பஸ் விபத்தில் மரணம் அடைந்தவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முன்னர் பஸ் வண்டியை குறிப்பிட்ட
இடத்தில் இருந்து அகற்றி பொலிஸ் நிலையம் கொண்டு செல்ல முற்பட்ட பொலிசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே முறுகல் நிலமை ஏற்பட்டது .
 
விபத்தில் அகப்பட்ட பஸ் வண்டி தென்னிலங்கையைச் சேர்ந்தது என்பதுடன் சாரதியும் தப்பி ஒடிய நிலையில் பொலிஸ் நிலையம் சென்றுள்ளார் . இந்நிலையில் குறிப்பிட்ட சாரதிக்கு உதவி செய்யும் முகமாக பொலிசார் நடந்து கொள்கின்றார்கள் என்ற அபிப்பிராயத்தின் அடிப்படையில் இத்தகைய நிலைக்கு பொது மக்கள் தள்ளப்பட்டார்கள் .
இதற்க்கு ஏற்ப சிவில் உடையில் குறிப்பிட்ட இடத்திற்க்கு வருகை தந்த கோப்பாய் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உடனடியாக பஸ் வண்டியை அகற்றமுயன்றதுடன் அதனை தடுக்க முற்பட்டவர்களை படம் எடக்கும் நடவடிக்கையிலும் ஈடபட்டார் .
 
இருபகுதியினருக்கும் இடையே முறுகல் நிலமை உச்சத்திறக்கு சென்றதைத் தொடர்ந்துபொலிசார் கொடுத்த தகவலின் அடிப்படையில் துப்பாக்கி தாங்கிய இராணுவத்தினர் குறிப்பிட்ட இடத்திற்க்கு வரவழைக்கப்பட்டார்கள் .
 
ஆனாலும் கலைந்துசெல்ல மறுத்த பொது மக்கள் நீதவான் வந்து பார்வையிட்டபின்னரே பஸ் வண்டியை எடுக்க முடியும் என விடாப்பிடியாக நின்ற நிலையில் குறிப்பிட்ட இடத்திறக்கு யாழ்ப்பாணம் நீதவான் எம . சிவகுமார் வருகைதந்து பொது மக்கள்முன்னர் விசாரனையை மேற்க்கொண்டதுடன் சடலத்தையும் உடனடியாக வைத்தியசாலைக்க அனுப்பி வைத்ததைத் தொடர்ந்து பஸ் வண்டியும் மோட்டார் சையிக்கிளும் கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்க்கு கொண்டுசெல்லப்பட்டது .
ttnn

No comments:

Post Top Ad