முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்படும் ; த.தே.கூ வாக்குறுதி - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, September 04, 2013

முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்படும் ; த.தே.கூ வாக்குறுதி


தமது ஆட்சியில் முஸ்லிம்களின் நலன்கள் குறிப்பாக மீள் குடியேற்றத்திற்கு முழுமையான முன்னுரிமை கொடுக்கப்படும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு வாக்குறுதி வழங்கியுள்ளது.

இரு சமூகங்களும் ஒன்றிணைந்து இயங்குவதற்கான தேவையிருப்பதைச் சுட்டிக்காட்டிய முதன்மை வேட்பாளர் விக்ணேஷ்வரன் இது தொடர்பில் தாம் தெளிவாக இருப்பதாகக் கூறுவதோடு தம்மோடு இணைந்து கொண்டிருக்கும் முஸ்லிம் அமைப்போடு சேர்ந்து முஸ்லிம் சமூகத்துக்கு நல்லது செய்யும் எண்ணத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
முஸ்லிம் – தமிழ் சமூகங்களுக்கிடையில் நிலவி வரும் இடைவெளிக்கான காரணங்கள் கடந்த கால அனுபவங்களாக இருக்கும் அதே வேளை அது தொடர்பாக தாம் பல தடவை மன்னிப்பு கேட்டுவிட்டதாக கூட்டமைப்பின் சார்பில் சுட்டிக்காட்டப்பட்டது.
எனினும், தேர்தலில் அமையப்பெற்றிருக்கும் இக்குறுகிய கூட்டணி மக்களின் நம்பிக்கையை வளர்க்கப் போதுமானதாகவோ அல்லது முஸ்லிம் சமூகத்துக்குத் தேவையான பல்வேறு விடயங்கள் ஆழமாக பேசப்பட்டதாகவோ தெரியவில்லை.
திடீரென இணைந்து கொண்ட முஸ்லிம் கூட்டணி? கட்சியும் இது தொடர்பில் தெளிவான விளக்கங்களை இதுவரை முன்வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post Top Ad