முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பை தடைசெய்ய தீர்மானம் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, September 04, 2013

முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பை தடைசெய்ய தீர்மானம்


அரச சார்பற்ற நிறுவனமாக பதிவு செய்யப்பட்டிருக்கும் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பை தடை செய்ய வேண்டும் என நீதித்துறை ஆலோசனைக் குழு நீதிமன்றத்தை அறிவுறுத்தியுள்ளது.


சகோதரத்துவ எதிர்ப்பாளர்களால் நேற்று முன்தினம் தொடுக்கப்பட்ட வழக்கில் கடந்த மார்ச்சில் அரச சார்பற்ற நிறுவனமாக பதிவு செய்து கொண்ட முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பை கலைத்துவிட வேண்டும் என கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கை எதிர்வரும் நவம்பர் 12 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இராணுவ சதிப்புரட்சி மூலம் பதவி கவிழ்க்கப்பட்ட ஜனாதிபதி மொஹமட் முர்சியின் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் சட்ட ரீதியான அங்கீகாரம் குறித்து கேள்வி எழுந்ததையடுத்தே அந்த அமைப்பு தம்மை ஒரு அரச சார்பற்ற நிறுவனமாக பதிவு செய்து கொண்டது. கடந்த 1928 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட சகோதரத்துவ அமைப்புக்கு 1954 ஆம் ஆண்டில் இராணுவ ஆட்சியாளர்கள் தடை செய்தனர். எனினும் நீதித்துறை ஆலோசனைக்குழு தற்போது விடுத்துள்ள பரிந்துரையை நீதிமன்றம் ஏற்க வேண்டிய கடப்பாடு இல்லை என்பது குறிப்பி டத்தக்கது.

எனினும் சகோதரத்துவ அமைப்பு கடந்த பல தசாப்தங்களாக தடை செய்யப்பட்ட சூழலிலேயே தமது செயற்பாடுகளை முன்னெடுத்து வந்தது. 2011 மக்கள் எழுச்சி மூலம் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் பதவி கவிழ்க்கப்பட்ட பின்னரே அந்த அமைப்பு வெளிப்படையாக செயற்பட ஆரம்பித்தது. இதன் மூலம் அந்த அமைப்பு மக்கள் எழுச்சிக்கு பின்னர் இடம்பெற்ற பாராளுமன்ற மற்றும் ஜனாதிபதி தேர்தல் என அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இராணுவ சதிப்புரட்சிக்கு பின்னர் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பை ஒடுக்கும் நடவடிக்கையை பாதுகாப்புப் படையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். அந்த அமைப்பின் பெரும்பாலான தலைவர்கள் கைது செய்யப்பட்டு வன்முறையை தூண்டியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

No comments:

Post Top Ad