பிரிட்டனின் மிகப்பெரிய நூலகத்தை திறந்து வைத்த மலாலா - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, September 04, 2013

பிரிட்டனின் மிகப்பெரிய நூலகத்தை திறந்து வைத்த மலாலா


பிரிட்டனில் கட்டப்பட்டுள்ள மிகப்பெரிய நூலகத்தை, பாகிஸ்தான் மாணவி, மலாலா யூசுப், நேற்று திறந்து வைத்தார். ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்த தலிபான்கள், பெண்கள் பள்ளிக்கு செல்வதை எதிர்த்தனர். பாகிஸ்தானில், பெண் கல்விக்காக பிரசாரம் செய்த, மலாலா யூசுப்சாய், 16, என்ற மாணவியை, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், தலிபான்கள் சுட்டனர். 


இதில், மலாலாவுக்கு தலை மற்றும் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில், மலாலாவுக்கு, லண்டனில் உயர் சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது, உடல் நலம் தேறியுள்ள மலாலா, பிரிட்டனில் உள்ள, பர்மிங்காம் நகரில் படிக்கிறார். கடந்த, ஜூலை மாதம், ஐ.நா., சபையிலும், தன் பிறந்த நாளையொட்டி, மலாலா உரையாற்றினார். பர்மிங்காம் நகரில், 1,900 கோடி ரூபாய் செலவில், மிகப்பெரிய நூலகம் கட்டப்பட்டு உள்ளது. இந்த நூலகத்தை, மலாலா நேற்று திறந்து வைத்தார்.

No comments:

Post Top Ad