பாகிஸ்தானை குற்றம்சாட்ட பிரிட்டனுக்கு அருகதை கிடையாது ; இம்ரான் கான் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, September 05, 2013

பாகிஸ்தானை குற்றம்சாட்ட பிரிட்டனுக்கு அருகதை கிடையாது ; இம்ரான் கான்


பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெரீக் இ இன்சாப் கட்சி சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் சிறப்பான வெற்றியை பெற்றது. அப்போது நடந்த தேர்தலின் போது அக்கட்சியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை நடத்த லண்டனில் தலைமையிடமாக கொண்டு செயல்படும் முட்டாஹிடா குவாமி மூவ்மென்ட் (எம்.கியூ.எம்.) இயக்கத் தலைவர் அல்டாப் ஹூசைன் உத்தரவிட்டதாக குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன. 


இந்நிலையில் லண்டன் சென்ற இம்ரான் கான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் புகழிடம் அளிக்கிறது என்று பிரிட்டன் குற்றம் சாட்டுவதற்கான அருகதையை பிரிட்டன் இழந்துவிட்டது. ஏனெனில், கொலைக்குற்றம் சாட்டப்பட்டுள்ள எம்.கியூ.எம். தலைவர் அல்டாப் ஹூசைன் மீது பிரிட்டன் நடவடிக்கை எடுக்கவில்லை. 

பாகிஸ்தான் தெரீக் இ இன்சாப் கட்சியின் தலைவர் சாரா ஷாஹித் ஹூசைன் சுட்டுக்கொல்லப்பட்டதில் எம்.கியூ.எம். தலைவர் ஹூசைனுக்கு தொடர்பு இருக்கிறது. அவர் சுட்டுக்கொல்லப்படுவதற்கு இரு நாட்களுக்கு முன்பு ஹூசைன் மிரட்டுவதாக பிரிட்டன் துணை தூதரிடம் புகார் அளித்திருக்கிறோம். 

அப்படியிருக்கையில் ஹூசைன் மீது நடவடிக்கை எடுக்காமல் ஒரு தீவிரவாதிக்கு பிரிட்டன் ஆதரவு அளிக்கிறது எப்படி?. எனவே தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் பிரிட்டன் இரட்டை வேடம் போடுகிறது. 

இவ்வாறு இம்ரான் குற்றம் சாட்டினார்.

No comments:

Post Top Ad