நவநீதம்பிள்ளை புலிகளின் தீவிர ஆதரவாளர் : சம்பிக்க - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Tuesday, September 03, 2013

நவநீதம்பிள்ளை புலிகளின் தீவிர ஆதரவாளர் : சம்பிக்க

(vi)
ஐ.நா. மனித உரி­மைகள் ஆணை­யாளர் நவ­நீ­தம்­பிள்ளை விடு­தலைப் புலி­களின் தீவிர ஆத­ர­வாளர். இவ­ரிடம் இலங்கை நீதி கேட்க நினைப்­பது வேடிக்­கை­யாக உள்­ளது. நாட்­டுக்குள் நவ­நீ­தம்­பிள்­ளையை அனு­ம­தித்திருக்­கவே கூடாது. இலங்கை வெளிப்­படைக் கொள்­கை­யுடன் செயற்­பட்ட போதிலும் நவ­நீ­தம்­பிள்ளை புலிகளுக்கு ஆத­ர­வா­ன நிலைப்­பாட்­டி­லி­ருந்தே கருத்­துக்­களை வெளி­யிட்­டுள்ளார் என்று ஜாதிக ஹெல உறு­ம­யவின் பொதுச் செய­லா­ளரும் அமைச்­ச­ரு­மான சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்தார்.


இலங்­கையின் உள்­ளக அர­சியல் விவ­கா­ரங்­களில் நவ­நீ­தம்­பிள்ளை தலை­யிட்­ட­மையை ஏற்­றுக்­கொள்ள முடி­யாத ஒன்­றாகும். அதே­போன்று தமிழ் தேசி­யக்­ கூட்­ட­மைப்­பி­னரின் பேச்சைக் கேட்டு சர்வதேச விசா­ர­ணைக்கு அழைப்பு விடு­வது எவ்­வி­தத்­திலும் நியாயம் இல்லை. தான் நேர்­மை­யா­னவள் என்­ப­தைக்­காட்­டிக்­கொள்ள போலி­யாக விடு­தலைப் புலி­களை விமர்­சித்­தமை உலக மகா நடிப்பு என்றும் அவர் குறிப்­பிட்டார்.

இது குறித்து அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க தொடர்ந்தும் கூறு­கையில்,- இலங்­கைக்கு எதி­ரான நிலைப்­பாட்­டி­லேயே நவ­நீ­தம்­பிள்ளை ஆரம்ப காலம் தொட்டே செயற்­பட்டார். இலங்கை விஜ­யத்தில் தனக்கு சாத­க­மான சாட்­சி­க­ளையும் தட­யங்­க­ளையும் வடக்கு மட்டும் கிழக்­கிற்­கான விஜ­யத்தின் போது நவ­நீ­தம்­பிள்ளை சேக­ரித்துக் கொண்டார். 

எதிர்­வரும் செப்­டெம்பர் மாதம் நடை­பெ­ற­வுள்ள ஐ.நா. மனித உரி­மைகள் அமர்வில் வாய்­மூ­ல­மான விளக்­க­ம­ளிப்பை இலங்கை தொடர்பில் முன் வைப்பார்.
இதன் பின்னர், எதிர்­வரும் மார்ச் மாதம் அமர்வில் முழு அள­வி­லான அறிக்­கை­யினை இலங்­கைக்கு எதி­ராக நவ­நீ­தம்­பிள்ளை சமர்ப்­பிப்பார். உண்­மையில் ஜெனீ­வாவில் தீர்­மா­னத்தை நிரா­க­ரித்­தது போல் நவ­நீ­தம்­பிள்­ளையின் வரு­கை­க­ளையும் இலங்கை நிரா­க­ரித்­தி­ருக்க வேண்டும். 

ஏனெனில் நவ­நீ­தம்­பிள்ளை மனித உரி­மைகள் பேர­வையின் ஆணை­யாளர் பத­வியில் இருந்­தாலும் அவர் முழு அளவில் விடு­தலைப் புலி­களின் ஆத­ர­வாளர் ஆவார். ஐ.நா. நிபுணர் குழு அறிக்­கையில் இலங்­கைக்கு எதி­ராக முன் வைக்­கப்­பட்­டுள்ள பாரிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தடயங்களை தேடி அவ்வறிக்கையினை நியாயப்படுத்தி நெறிப்படுத்துவதே நவநீதம்பிள்ளையின் நோக்கமாகும். இதற்கு எந்த விதத்திலும் இடமளிக்க முடியாது எனக்கூறினார்.

No comments:

Post Top Ad