கொழும்பில் நடைபெற்ற இராவண விழாவில் கோத்தா (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, September 30, 2013

கொழும்பில் நடைபெற்ற இராவண விழாவில் கோத்தா (படங்கள் இணைப்பு)


கொழும்பு பன்னிப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள தெவ்ரம் விகாரை நேற்று இராவணனுக்கான பெரஹெர (திருவிழா) ஒன்றை நடத்தியது.


இதில் பிரதம அதிதியாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ கலந்து கொண்டார்.
பண்டைய காலத்தில் இலங்கையை ஆட்சி செய்ததாக கூறப்படும் இராவணன் மன்னரை அடையாளப்படுத்தி நடத்தப்பட்ட இந்த பெரஹெர பண்டைய பாரம்பரிய கலாசார அடையாளங்களுடன் நடத்தப்பட்டது.
லங்கேஸ்வர மகா இராவணா என்ற பெயரில் இந்த பெரஹெர நடத்தப்பட்டது. அந்த காலத்தில் இலங்கையில் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் மேளங்கள், ஆபரணங்கள், ஆடைகளை அணிந்தவர்களும் இதில் கலந்து கொண்டனர்.
இராவணனின் மயில் வடிவ புஷ்பக விமானம் போன்று வடிவமைக்கப்பட்ட ஊர்தி ஒன்றும் ஊர்வலத்தில் பயணித்தது.
தெவ்ரம் விகாரையின் விகாராதிபதி கொல்லன்னாவே ஸ்ரீ சுமங்கள தேரர் எழுதிய மகா இராவணா ஸ்ரீ லங்கேஸ்வர என்ற நூல் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயவுக்கு வழங்கப்பட்டது.No comments:

Post Top Ad