யாரும் முஸ்லிம்களின் அவலம் பற்றி பேச முன் வரவில்லை என்பது நூறு வீதமான உண்மையாகும். - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Tuesday, September 03, 2013

யாரும் முஸ்லிம்களின் அவலம் பற்றி பேச முன் வரவில்லை என்பது நூறு வீதமான உண்மையாகும்.

(ajl)

இலங்கை முஸ்லிம்கள் பற்றி தமிழ் தேசிய கூட்டமைப்பினர் நவநீதன் பிள்ளையிடம் பேசியதை பாராட்ட முடியாமல், முஸ்லிம்கள் சம்பந்தமாக பேசுவதற்கு யாரும் முன்வரவில்லை என்ற நவநீதனின் கருத்தை முஸ்லிம்களை திசை திருப்புவதற்காக த. தே. கூட்டமைப்பு சொல்கிறது 
என அ. இ. மக்கள் காங்கிரஸ் செயலாளர் கூறியிருப்பது அவரது கட்சியின் கையாலாகாதன்மையையும் சமூகத்iதை ஏமாற்றும் அப்பட்டமான குனத்தையுமே காட்டுகிறது  என முஸ்லிம் மக்கள் கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.


இது பற்றி அவர் மேலும் தெரிவித்ததாவது, முஸ்லிம்கள் சம்பந்தமாக பேசுவதற்கு எவரும் முன் வரவில்லை என நவநீதன் பிள்ளை தெரிவித்திருப்பதன் பொருள் என்னவென்றால் முஸ்லிம்கள் சம்பந்தமாக பேசுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களைக்கொண்ட எந்தக்கட்சியும் முன்வரவில்லை என்பதாகும்.  பொதுவாக சர்வதேச விவகாரங்களின் போது மக்கள் பிரதிநிதிகளின் கருத்துக்களையே இராஜதந்திர கருத்தாக ஏற்றுக்கொள்ளப்படும். இந்த வகையில் பாராளுமன்றத்தில் தூங்கிக்கொண்டிருக்கும் எந்தவொரு முஸ்லிம் கட்சியும் முஸ்லிம்களின் அவலம் பற்றி பேச முன் வரவில்லை என்பது நூறு வீதமான உண்மையாகும்.

நவநீதனிடம் அறிக்கையை முன்வைக்கப்போகிறோம் என கர்ஜித்த மு. கா செயலாளர் ஹசன் அலி வழமை போன்று அடிபட்ட பூனை போன்று சுருட்டிக்கொண்டார். முஸ்லிம்களின் அதிக பட்ச ஆணையை பெற்றதாக வீரம் பேசும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரோ முஸ்லிம்கள் பிரச்சினை பற்றி அமைச்சர்கள் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்கள் என சிறுபிள்ளைத்தனமாக பதில் வழங்கி சமூகத்தை பதினெட்டாவது தடவையாக காட்டிக்கொடுத்து விட்டார். அதே போல் மு. காவின் மாகாண சபை உறுப்பினர்களோ, அக்கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள கல்முனை மாநகர சபையோ நவிப்பிள்ளையை கண்டு முஸ்லிம்கள் பிரச்சினையை எடுத்துரைக்க சிறிய முயற்சியும் எடுக்காததன் மூலம் தாங்கள் முஸ்லிம் விரோத அரசின் கைப்பிள்ளைகள் என்பதை காட்டி விட்டார்கள். அமைச்சர் அதாவுள்ளாவோ தான் பள்ளிவாசல்கள் பற்றி பேசவே மாட்டேன் என தனது வழமையான தந்திரத்தை வெளிக்காட்டி ஒதுங்கிக் கொண்டார்.

இந்த நிலையில் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களையும், பல மாகாண, பிரதேச சபை உறுப்பினர்களையும், ஒன்றரை அமைச்சர்களையும் கொண்ட அ. இ. மக்கள் காங்கிரஸ் நவிப்பிள்ளையை சந்திக்க முயற்சி எடுத்ததாகவும் தமக்கு சந்தர்ப்பம் தரப்படவில்லை எனவும் அறிக்கை விட்டிருப்பது உலக மகா நகைப்பாகவும், சமூகத்தை அப்பட்டமாக ஏமாற்றுவதுமாகும். இப்படி ஒரு கையாலாகாத கட்சி இருப்பதை விட அதனை கலைத்து விடலாம். இத்தகைய ஏமர்றறுக்காரர்களால் சமூகம் இன்னுமின்னும் கஷ்டங்களையே அனுபவிக்க வேண்டி வரும்.

தமது கட்சி அமைச்சரின் தபால் தலைப்பில் மனித உரிமை காரியாலயத்துடன் தொடர்பு கொண்டு நேரத்தை கேட்டிருந்தால் நிச்சயம் பதில் கிடைத்திருக்கும். அதனை விடுத்து தமது பதவிகளுக்கு ஆப்பு விழுந்து விடும் என்ற அச்சத்தின் காரணமாக மௌனமாக இருந்து அரசிடம் நல்ல பிள்ளையாகி விட்டு டு இப்போது சாதாரண ஒரு கட்சி போன்று தமக்கு நேரம் தரப்படவில்லை என வெட்கமற்று அறிக்கை விடுகின்றார்கள்.
முஸ்லிம் கட்சிகள் இவ்வாறு சமூகத்துரோகம் செய்யும் நிலையில் த. தே. கூட்டமைப்பினர் முஸ்லிம் சமூகத்தின் இன்னல்களை நவநீதன் பி;ளளையிடம் சுட்டிக்காட்டியிருப்பது பெரிதும் வர வேற்கப்பட வேண்டிய விடயம் என்பதுடன் இதற்காக கூட்டமைப்பை எமது கட்சி பாராட்டுகிறது எனவும் முபாறக் மௌலவி தெரிவித்துள்ளார்.


No comments:

Post Top Ad