தம்புள்ளையில் ஆலயம் தாக்கப்பட்ட பின்ணணியில் நகர அபிவிருத்தி அதிகாரசபையே உள்ளது ; யோகராஜன் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, September 05, 2013

தம்புள்ளையில் ஆலயம் தாக்கப்பட்ட பின்ணணியில் நகர அபிவிருத்தி அதிகாரசபையே உள்ளது ; யோகராஜன்

(vi)
ஐக்­கிய நாடு­களின் மனித உரி­மை­க­ளுக்­கான ஆணை­யாளர் நவ­நீ­தம்­பிள்ளை இலங்கை விஜ­யத்தை முடித்துக் கொண்டு இங்­கி­ருந்து திரும்­பிய மறு­தி­னத்­தி­லேயே தம்­புள்ளை பத்­தி­ர­கா­ளி­ய­மமன் ஆல­யத்தின் மீது தாக்­குதல் நடத்­தப்­பட்­டுள்­ளது. இதன் பின்­ன­ணியில் நகர அபி­வி­ருத்தி அதி­கார சபையே உள்­ளது என்று ஐக்­கிய தேசியக் கட்சி எம்.பி.யான ஆர். யோக­ராஜன் நேற்று சபையில் குற்­றம்­சாட்­டினார்.


இன்­றைய நிலையில் தம்­புள்­ளையில் குறித்த பிர­தே­சத்தில் வாழ்ந்து வந்த 42 தமிழ் குடும்­பங்கள் அங்­கி­ருந்து அப்­பு­றப்­ப­டுத்­தப்­பட்டு வீதியில் தள்­ளப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை ஐக்­கிய தேசியக் கட்­சி­யினால் கொண்­டு­வ­ரப்­பட்ட அரச ஊழி­யர்­க­ளுக்கு 10 ஆயிரம் ரூபா சம்­பள அதி­க­ரிப்­பினை வலி­யு­றுத்தும் சபை ஒத்­தி­வைப்பு வேளை பிரே­ரணை மீதான விவா­தத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.
யோக­ராஜன் எம்.பி. இங்கு மேலும்­கூ­று­கையில்,

தம்­புள்­ளையில் ஸ்ரீபத்­திர காளி­யம்மன் கோவில் தாக்­கப்­பட்­ட­மை­யா­னது விஷ­மத்­த­ன­மான செயற்­பா­டு­களில் ஒன்­றாக கருத முடி­யா­துள்­ளது. அர­சாங்­கத்தின் கொள்கைத் திட்­டத்தின் ஒரு அம்­ச­மா­கவே இந்த கோயில் மீது தாக்­குதல் நடத்­தப்­பட்­டி­ருக்­கின்­றது.

சுமார் 30 வருடம் பழைமை வாய்ந்த இந்த கோயிலில் கடந்த 18 வரு­டங்­க­ளாக தேர்த்­தி­ரு­வி­ழாவும் பறவைக் காவடி உற்­ச­வங்­களும் இடம்­பெற்று வந்­துள்­ளன. இக்­கோவில் மீதான தாக்­கு­தலின் பின்­ன­ணியில் நகர அபி­விருத்தி அதி­கா­ர­ச­பையே இருக்­கின்­றது என்­பதை அங்கு விஜயம் செய்து அங்­குள்ள மக்­க­ளிடம் உரை­யா­டி­ய­தி­லி­ருந்து அறிந்து கொள்­ளக்­கூ­டி­ய­தாக இருந்­தது.

இங்கு 42 தமிழ் குடும்­பங்கள் வாழ்ந்து வரு­கின்­றன. எனினும், தற்­போது நகர அபி­விருத்தி அதி­கா­ர­ச­பையின் அறி­வு­றுத்­தலின் பிர­காரம் அந்த 42 குடும்­பங்­களும் தமது வாழ்­வி­டங்­களில் இருந்து அப்­பு­றப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.
அத்­துடன் புனித பூமி வேலைத் திட்­டத்தை நோக்­காகக் கொண்டே இந்த செயற்­பாடு இடம்­பெற்­றி­ருக்­கின்ற அதே­வேளை, மேற்­படி கோயி­லையும் உடைத்து அப்­பு­றப்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களும் இடம்­பெற்­றுள்­ளன. இதனை அகற்­று­வ­தற்­கென விதிக்­கப்­பட்ட காலக்­கெ­டுவின் இறு­திநாள் (நாளை) இன்று ஆகும்.

இங்கிருந்து அப்­பு­றப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள 42 குடும்­பங்­க­ளுக்கும் நஷ்­ட­ஈ­டாக தலா ஒரு இலட்சம் ரூபா என்ற தொகையே வழங்­கப்­பட்­டுள்­ளது. இந்த ஒரு இலட்சம் ரூபாவில் எதுவும் செய்ய முடி­யாது. அந்த மக்கள் தமக்­கென்று வீடில்­லாது உற­வி­னர்கள் நண்­பர்கள் வீடு­களில் தற்­கா­லி­க­மாக தங்­கி­யுள்­ளனர்.

கதிர்­காமம் என்ற புனித பூமியில் பெளத்த விகா­ரை­களும் பள்­ளி­வா­சலும் இருக்­கின்­றன. அதே­போன்று கண்டி தலதா மாளிகை அமைந்­துள்ள புனித பூமி­யிலும் இந்து ஆலயம் இருக்­கின்­றது. அப்­ப­டி­யெனில் தம்­புள்­ளையில் அமை­ய­வுள்ள புனித பூமி திட்­டத்­தினுள் ஏன் இந்து ஆலயம் இருக்­க­ மு­டி ­யாது என்­பது தான் எமது கேள்­வி­யாகும். தம்­புள்­ளையில் இருந்து இந்து ஆல­யத்தை அப்­பு­றப்­ப­டுத்­து­வ­தற்­கான தேவை என்ன?

தம்­புள்­ளையில் இந்து ஆல­யத்தின் மீது நடத்­தப்­பட்ட தாக்­குதல் மற்றும் அதனை அப்­பு­றப்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கை­யா­னது ஐ.நா. சாச­னத்­துக்கு எதி­ரா­ன­தாகும். மேலும் ஐ.நா. மனித உரி­மைகள் ஆணை­யாளர் நவ­நீ­தம்­பிள்ளை இலங்­கை­யி­லி­ருந்து திரும்­பிய மறு­நாளே இந்த தாக்­குதல் இடம்­பெற்­றி­ருக்­கின்­றது. எனவே, இதற்கு அர­சாங்­கமே முழுப் பொறுப்பும் கூறவேண்டும்.

கிழக்கு மாகாண சபைக்­கான தேர்தல் இடம்­பெற்ற சந்­தர்ப்­பத்தில் தான் தம்­புள்­ளையில் முஸ்லிம் பள்­ளி­வாசல் மீது தாக்­குதல் நடத்­தப்­பட்­டது. தற்­போது வடக்கு, வடமேல் மற்றும் மத்­திய மாகா­ணம் ஆகி­ய­வற்­றுக்­கான தேர்­தல்கள் இடம்­பெ­ற­வி­ருக்­கின்ற இந்த சந்­தர்ப்­பத்தில் தம்­புள்­ளையில் இந்துக் கோவில் உடைக்­கப்­பட்­டுள்­ளது.
எப்­படி இருப்­பினும் தம்­புள்­ளை யில் குறித்த பிரதேசத்தில் வாழ்ந்து வந்த நிலையில் இன்று வீதியில் விடப்பட்டுள்ள 42 குடும்பங்களும் தமக் கான குடியிருப்புக்களை அமைத்துக் கொள்வதற்கான காணிகளையும் தேவை யான நிதியையும் பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோன்று, தம்புள்ளை புனித பூமி திட்டத்தில் இருந்து அப்புறப்படுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள மேற்படி ஆலயத்தை பிறிதொரு இடத்தில் அமைத்துக் கொள்ளும் பொருட்டு அதற்கான காணியையும் நிதியையும் அரசாங்கமே பெற்றுக் கொடுக்கவேண்டும் என்றார்.

No comments:

Post Top Ad