மன்னார் பள்ளிமுனை ஆலய செயலாளர் மீது இனந்தெரியாதோர் தாக்குதல் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, September 30, 2013

மன்னார் பள்ளிமுனை ஆலய செயலாளர் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்

(vi)
மன்னார் பள்ளிமுனை புனித லூசியாள் ஆலய நிர்வாக சபையின் செயலாளரான லக்ஷ்மன் பிகிராமோ மீது நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இனந்தெரியாதோரின் தாக்குதலுக்கு இலக்கான நிலையில் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இது தொடர்பாக பாதிக்கப்பட்டவரது சகோதரர் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை புனித லூசியாள் ஆலய வீதி வழியாக நிர்வாக சபை செயலாளரான லக்ஷ்மன் பிகிராமோ தொலைபேசி கதைத்துக்கொண்டு சென்ற போது பின்னால் வாகனத்தில் வந்த இனந்தெரியாதோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார்.

இதன் போது கடுமையான உட்காயங்களுக்கு உள்ளான நிலையில் ஆலய நிர்வாக சபை செயலாளர் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை இதன் பின்னணியில் அரசியல் நோக்கம் இருக்கலாம் எனவும் தேர்தல் காலங்களில் ஏற்பட்ட முரண்பாடுகளின் எதிரோலியாகவே இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளதாகவும் தெரியவருகின்றது.

மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post Top Ad