இலங்கை நீதிமன்ற அதிகாரத்திற்கு உட்பட்ட பிரதேச அறிக்கை ஹக்கீமிடம் கையளிப்பு (வீடியோ இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, September 04, 2013

இலங்கை நீதிமன்ற அதிகாரத்திற்கு உட்பட்ட பிரதேச அறிக்கை ஹக்கீமிடம் கையளிப்பு (வீடியோ இணைப்பு)


இலங்கை நீதிமன்ற அதிகாரத்திற்கு உட்பட்ட பிரதேசம் தொடர்பில் ஆராயப்பட்ட அறிக்கை நேற்று நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற அதிகாரத்திற்குட்பட்ட புதிய பிரதேசம் 2010 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10 ஆம் திகதி அறிவிக்கப்பட்டது.
ஆனாலும் பிரதேச சட்டத்தரணிகள் சங்கத்தினால் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதனால் நீதி அமைச்சர் மற்றும் உயர் நீதியரசர் ஆகியோர் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய மீண்டும் அது குறித்து ஆராய்ப்பட்டது.
உயர் நீதிமன்ற நீதியரசர் காமினி அமரதுங்கவின்  தலைமையில் இந்த குழு செயற்பட்டதோடு, பிரதேச சட்டத்தரணிகள் சங்கத்தில் அங்கம் வகிப்பவர்களின் கருத்துக்கள் வாய்மூலமாகவும் எழுத்து மூலமாகவும் பெற்றுக் கொள்ளப்பட்டன.நியூஸ் பெஸ்ட்

No comments:

Post Top Ad