பாகிஸ்தான் பிரதமர் நவாஸ்செரீப் வீட்டுக்கு ரூ.950 கோடியில் குண்டு துளைக்காத சுவர் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Friday, September 06, 2013

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ்செரீப் வீட்டுக்கு ரூ.950 கோடியில் குண்டு துளைக்காத சுவர்


பாகிஸ்தான் பிரதமர் நவாஸ்செரீப் வீட்டுக்கு ரூ.950 கோடியில் குண்டு துளைக்காத பாதுகாப்பு சுவர் கட்டப்படுகிறது.

பாகிஸ்தானில் சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து அக்கட்சியின் தலைவர் நவாஸ் செரீப் பிரதமராக பதவி ஏற்றுள்ளார்.
இவரது தம்பி ஷபாஷ் செரீப். இவர் பஞ்சாப் மாநில முதல்–மந்திரியாக இருக்கிறார். இவர்கள் இருவரும் ராய்விண்ட் என்ற இடத்தில் உள்ள குடும்ப எஸ்டேட்டில் தங்கியுள்ளனர்.

இவர்களுக்கு தீவிரவாதிகளின் தாக்குதல் அச்சுறுத்தல் உள்ளது. எனவே அவர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இருந்தாலும் மேலும் பாதுகாப்பை பலப்படுத்த கடும் நடவடிக்கையை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி இவர்களது குடும்பத்தினர் தங்கியிருக்கும் ராய்விண்ட் எஸ்டேட்டை சுற்றி குண்டு துளைக்காத வகையில் பாதுகாப்பு சுவர் கட்டப்படுகிறது. அதற்காக ரூ.950 கோடி செலவிடப்படுகிறது.
இந்த தகவலை பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் செய்தி தொடர்பாளர் ஆசிம்கான் நியாஷி தெரிவித்துள்ளார்.
நவாஸ் செரீப்பின் எஸ்டேட் வீடு பிரதமரின் முகாம் அலுவலகமாகவும் செயல்படுவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் அவர் கூறினார்.

No comments:

Post Top Ad