காத்தான்குடியில் திவிநெகும திட்டத்தில் 90பயனாளிகளுக்கு கோழிக்குஞ்சுகள் வழங்கி வைப்பு-(படங்கள் இணைப்பு - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, September 30, 2013

காத்தான்குடியில் திவிநெகும திட்டத்தில் 90பயனாளிகளுக்கு கோழிக்குஞ்சுகள் வழங்கி வைப்பு-(படங்கள் இணைப்பு


(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் திவி நெகும வேலைதிட்டத்தின் கீழ் காத்தான்குடி பிரதேச செயலகமும் காத்தான்குடி பிரதேச கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகமும் இணைந்து காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பயனாளிகளுக்கு கோழிக் குஞ்சிகளை வழங்கி வருகின்றது.


வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் திவி நெகும வேலைதிட்டத்தின் கீழ் சுமார் 90 பயனாளிகளுக்கு கோழிக் குஞ்சு வழங்கும் இந் நிகழ்வு 30-09-2013 இன்று திங்கட்கிழமை காலை காத்தான்குடி பிரதேச அரச கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன் போது ஒரு பயனாளிக்கு 10 கோழிக் குஞ்சுகள் வீதம் 90 பயனாளிகளுக்கு கோழிக் குஞ்சுகள் காத்தான்குடி பிரதேச அரச கால்நடை வைத்திய அதிகாரி எஸ்.எம்.ஐ.எல்.சாகலசு10ரியவினால் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் காத்தான்குடி அரச  கால்நடை வைத்திய அதிகாரி எஸ்.எம்.ஐ.எல்.சாகலசூரிய, கால்நடை அபிவிருத்தி உத்தியோகத்தர் வி.கோவேந்திரன்,கால் நடை அபிவிருத்தி காரியாலய உத்தியோகத்தர் சலீம் உட்பட பலரும் பிரசன்னமாயிருந்தனர்.


No comments:

Post Top Ad