இந்தோனேசியாவில் பாரிய நில நடுக்கம் ரிக்டர் அளவில் 6.5 ஆகப் பதிவு - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, September 02, 2013

இந்தோனேசியாவில் பாரிய நில நடுக்கம் ரிக்டர் அளவில் 6.5 ஆகப் பதிவு


பசிபிக் பூகம்ப வளையத்திற்குள் வரும் இந்தோனேசியாவில் அடிக்கடி ஏற்படும் பூகம்பத்தால் மக்கள் அவதியுற்று வருகின்றனர். கடந்த 2004-ம் ஆண்டு ஏற்பட்ட பூகம்பத்திற்கு லட்சத்திற்கு மேல் மக்கள் உயிரிழந்தனர்.
 

இந்நிலையில் இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் உள்ள மலூக்கா மாகாண பரத் தயா தீவுகளில் நேற்றிரவு 8.52 மணிக்கு கடுமையான பூகம்பம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.5 ஆகப்பதிவாகியுள்ளதாக அமெரிக்கா மண்ணியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

10 வினாடிகள் நீடித்த இந்த கடும் பூகம்பத்தால் உயிருக்கு பயந்த மலூக்கா மாகாண மக்கள் பீதியில் தங்கள் வீடுகளை விட்டு வீதியில் ஓடிவந்தனர். தூரப்பகுதியில் ஏற்பட்ட இந்த கடும் பூகம்பத்தால் உயிர் மற்றும் பொருள் சேதம் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. 

No comments:

Post Top Ad