மும்பை அணியிலிருந்தும் லசித் மலிங்க விலகல் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Saturday, August 31, 2013

மும்பை அணியிலிருந்தும் லசித் மலிங்க விலகல்


இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க சம்பியன்ஸ் லீக் டுவென்டி டுவென்டி தொடரிலும் பங்குபற்ற மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பியன்ஸ் லீக் டுவென்டி டுவென்டி தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் குழாமில் லசித் மலிங்க இடம்பெறாத காரணத்தினாலேயே இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் செப்ரெம்பரில் தனது இரண்டாவது குழந்தையை லசித் மலிங்க எதிர்பார்க்கும் நிலையில், குழந்தை பிறக்கும் காலத்தில் தனது மனைவியுடன் இருப்பதற்கு லசித் மலிங்க விரும்புகிறார். இதன் காரணமாக இலங்கையின் சிம்பாப்வே தொடரிலிருந்தும், மும்பை இந்தியன்ஸ் சார்பான சம்பியன்ஸ் லீக் டுவென்டி டுவென்டி தொடரிலிருந்தும் அவர் விடுப்புக் கோரியிருந்தார்.
சிம்பாப்வே தொடரில் பங்குபற்றாமல் விடுவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை அணியின் பிரதம தேர்வாளர் சனத் ஜெயசூரிய அறிவித்திருந்தார். சம்பியன்ஸ் லீக் டுவென்டி டுவென்டி தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் குழாமிலும் லசித் மலிங்க இடம்பெறவில்லை.
அண்மையில் நிறைவடைந்த கரீபியன் பிறீமியர் லீக் தொடரின் பின்னர் தொழில்முறை கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்ற றிக்கி பொன்டிங்கும் இக்குழாமில் இடம்பெற்றிருக்கவில்லை. இக்குழாமின் தலைவராக றோகித் சர்மா செயற்படவுள்ளார்.
அறிவிக்கப்பட்டுள்ள குழாம்:
றோகித் சர்மா, சச்சின் டென்டுல்கர், டினேஷ் கார்த்திக், பிரக்ஜான் ஓஜா, ஹர்பஜன் சிங், அம்பத்தி ராயுடு, றிஷி தவான், ஆதித்தியா தரே, அக்‌ஷர் பட்டேல், அபு நெச்சிம் அஹமட், கெரான் பொலார்ட், டுவைன் ஸ்மித், நேதன் கோர்ட்டர் நீல், மிற்சல் ஜோன்சன், கிளென் மக்ஸ்வெல்

No comments:

Post Top Ad