சிரியா மீது போர் தொடுக்க மேற்கத்திய நாடுகள் திட்டம் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, August 28, 2013

சிரியா மீது போர் தொடுக்க மேற்கத்திய நாடுகள் திட்டம்


சிரியாவின் அதிபர் பஷர்–அல்–ஆசாத்துக்கு எதிராக போராடிவரும் பொதுமக்கள் மீது சமீபத்தில் ராணுவம் ரசாயன குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. அதைத் தொடர்ந்து நச்சு புகையில் மூச்சு திணறி 1300 பேர் பலியாகினர். இதற்கு ஐ.நா.சபை மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ரசாயன குண்டுவீச்சு தொடர்பாக ஐ.நா.சபை விசாரணை நடத்தி வருகிறது.


இந்த நிலையில், சிரியா இன்னும் ஓரிரு நாட்களில் போராட்டக்காரர்கள் மீது மீண்டும் ரசாயன குண்டு வீச திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
எனவே, சிரியா மீது அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளன. ஏற்கனவே அமெரிக்க படைகள் சிரியாவை நோக்கி சென்று கொண்டிருப்பதாக அந்நாட்டின் ராணுவ மந்திரி சக்கேகல் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில், அமெரிக் காவின் இந்த நடவடிக்கைக்கு அதன் நட்பு நாடுகளான ஐரோப்பிய மற்றும் கிழக்கு ஆசிய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. எனவே, சிரியா மீது மேற்கத்திய நாடுகள் தாக்குதல் நடத்தும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
அதே நேரத்தில், இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க சிரியாவும் தயார் நிலையில் உள்ளது. இது குறித்து சிரியா வெளியுறவு மந்திரி வாலித் முயல்லம் கூறும்போது, இப்பிரச்சினையை சமாளிக்க எங்களுக்கு 2 வழி உள்ளது.

ஒன்று நாங்கள் சரண் அடைய வேண்டும். மற்றொன்று எதிர்த்து போரிட வேண்டும். ஆனால், நாங்கள் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளுடன் எதிர்த்து போரிட்டு பதிலடி கொடுக்க தயாராக இருக்கிறோம்’’ என்றார்.

No comments:

Post Top Ad