இலங்கை வந்துள்ள நவனீதம்பிள்ளைக்கு நாம் மதிப்பளிக்க வேண்டும் ; சீலரத்ன தேரர் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, August 28, 2013

இலங்கை வந்துள்ள நவனீதம்பிள்ளைக்கு நாம் மதிப்பளிக்க வேண்டும் ; சீலரத்ன தேரர்

(nf)
பயங்கரவாதிகளின் அழைப்பின் பேரிலோ அல்லது புலம்பெயர் தமிழர்களினாலோ அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அழைப்பின் பேரிலோ, நவனீதம்பிள்ளை இலங்கைக்கு வரவில்லை என ஜனசெத முன்னணியின் தலைவர் பத்தரமுல்லே சீலரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.  
ஜெனீவாவில் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை தொடர்பிலும் இலங்கைத் தொடர்பிலும் பல்வேறு உண்மைக்குப் புறம்பான விடயங்ள் பேசப்பட்டது எனினும், அவர் அரசாங்கத்தின் அழைப்பின் பேரிலேயே இலங்கை வந்துள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
''அரசாங்க அழைப்பின் பேரில் இலங்கை வந்துள்ள அவருக்கு நாங்கள் மதிப்பளிக்க வேண்டும்''. எனக் குறிப்பிட்ட அவர், நல்லிணக்க ஆணைக்குழு
அறிக்கையின் படி நாட்டு மக்கள் தொடர்பில் அறிவுபூர்வமாக சிந்தித்து செயற்படுவதற்காகவே அவர் இலங்கை வந்துள்ளார் என சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதால் அவர் எதிர்மாறான அறிக்கையை முன்வைக்க வாய்ப்புள்ளது. நாட்டிலிருந்து வெறியேறும் வரை அவரின் பாதுகாப்பு மற்றும் கருத்துச் சுதந்திரம் என்பவற்றை நாம் உறுதிசெய்ய வேண்டும் என பத்தரமுல்லே சீலரத்ன தேரர்  மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post Top Ad