தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் இருந்த தேரர் உண்ணாவிரதத்தை கைவிட்டார் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Saturday, August 31, 2013

தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் இருந்த தேரர் உண்ணாவிரதத்தை கைவிட்டார்

(vi)
வெலிவேரிய - ரத்துபஸ்வலவில் அமைந்துள்ள சர்ச்சைக்குரிய தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் இருந்த தெரிபெஹே ஸ்ரீதம்ம தேரர் தனது உண்ணாவிரதத்தை கைவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


தொழிற்சாலைக்கு முன்பாக தேரர் நேற்று மாலை உண்ணாவிரதத்தை ஆரம்பித்திருந்தார்.

இந்நிலையில் குழு அறிக்கை கிடைக்கும் வரை தொழிற்சாலையை மூடுவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டதையடுத்தே தேரர் இம்முடிவை மேற்கொண்டுள்ளார்.

கொழும்பு மாவட்ட சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக்க தேரருக்கு இது தொடர்பில் அறிவித்ததையடுத்தே அவர் தனது உண்ணாவிரதத்தை கைவிட்டுள்ளார்.

No comments:

Post Top Ad