உதயமாகிறது றிஸானா நபீக் பவுண்டேஸனும் , இணையத் தளமும் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, August 29, 2013

உதயமாகிறது றிஸானா நபீக் பவுண்டேஸனும் , இணையத் தளமும்


(மூதூர் முறாசில்)
சவுதி அரேபியாவில் மரண தண்டனைக்கு உள்ளான  றிஸானா நபீக்கின் நினைவாக அமைக்கப்படவுள்ள ‘றிஸானா நபீக் பவுண்டேஸன்’ அமைப்பின் அங்குரார்ப்பண வைபவம் எதிர்வரும் 2013.09.01ஆம் திகதி  ஞாயிற்றுக் கிழமையன்று மூதூரில்  இடம்பெறவுள்ளது.


எஸ்.எப்.எம். அமைப்பின் தலைமை நிறைவேற்று அதிகாரி முஹம்மது மஹ்ரூப் தலைமையில் மூதூர் அந்-நஹார் மகளிர் மகாவித்தியாலயத்தில் இடம்பெறவுள்ள இவ்வைபவத்தில் றிஸானா நபீக்கின் பெற்றார் மற்றும் உறவினர்களோடு முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதன்போது  றிஸானா நபீக் பவுண்டேஸனும் அதற்கான உத்தியோகப10ர்வ இணையத்தளமொன்றும் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

இதேவேளை,பணிப் பெண்களாக வெளிநாடு சென்று பாதிப்பிற்குள்ளானவர்களின் பிள்ளைகள் மூவருக்கு அவர்களின் கல்வியைத் தொடர்வதற்கு புலமைப்பரிசில் மூன்றும் வழங்கப்படவுள்ளன.
பெண்கள் பணிப் பெண்களாக வெளிநாடு செல்வதற்கான காரணத்தை இல்லாமற் செய்வதற்கான முன்மாதிரியான திட்டங்களை செயற்படுத்துவதை முதன்மையான  நோக்கமாகக் கொண்டு இவ்வமைப்பு ஆரம்பிக்கப்படவுள்ளதென்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். 

No comments:

Post Top Ad