இலங்கைக்கு அழைக்கப்பட்டமையை தாம் ஏற்றுக் கொள்ளவில்லை ; தேசிய சுதந்திர முன்னணி - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, August 28, 2013

இலங்கைக்கு அழைக்கப்பட்டமையை தாம் ஏற்றுக் கொள்ளவில்லை ; தேசிய சுதந்திர முன்னணி


உண்மையை கண்டறியும் நோக்கில் நவநீதம்பிள்ளை இலங்கைக்கு அழைக்கப்பட்டமையை தாம் ஏற்றுக் கொள்ளவில்லை என்று அரசாங்க அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான  தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது
கட்சியின் பேச்சாளர் மொஹமட் முஸம்மில் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்
நவநீதம்பிள்யை இலங்கையில் ஏற்பட்டுள்ள அபிவிருத்தியையும் மனித உரிமைகள் முன்னேற்றத்தையும் கவனிக்க வேண்டும் என்று முஸம்மில் கோரியுள்ளார்.
இதேவேளை விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டமைக்கு பழி தீர்க்கும் வகையில் புலம்பெயர்ந்த தமிழர்களின் அட்டவணையின் அடிப்படையிலேயே நவநீதம்பிள்ளை இலங்கை வந்துள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
லிபியா, ஈராக் நாடுகளின் தலைவர்கள் வீதியில் வைத்து கொல்லப்பட்ட போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்பு எதுவும் கூறவில்லை என்றும் முஸம்மில் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post Top Ad