சிரியாவில் ரசாயன ஆயுதத் தாக்குதலுக்கான ஆதாரங்கள் உள்ளன: ஜோன் கெரி - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Saturday, August 31, 2013

சிரியாவில் ரசாயன ஆயுதத் தாக்குதலுக்கான ஆதாரங்கள் உள்ளன: ஜோன் கெரி


சிரியாவில் அரசு எதிர்ப்பாளர்கள் மீது ரசாயன ஆயுதத் தாக்குதல் நடத்தியிருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன என்று அமெரிக்க ராஜங்க செயலாளர் ஜோன் கெரி நேற்று தெரிவித்துள்ளார்.

பஷார் அல் ஆசாத் தன் நாட்டு மக்கள் மீது இரசாயன விஷ வாயுவை செலுத்தியிருப்பதற்கு வலுவான மற்றும் தெளிவான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இதனை ஒபாமா நிர்வாகம் தனது உளவுத்துறை தகவல்கள் மூலம் உறுதிப் படுத்தியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
சிரியாவில் 1400க்கும் மேற்பட்ட பொதுமக்கள் விஷ வாயு செலுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக கெரி கூறியுள்ளார். இவர்களில் சுமார் 400 பேர் சிறுவர்கள், குழந்தைகள் என்று கூறியுள்ளார் கெரி.

No comments:

Post Top Ad