முஸ்லிம்களுக்கு எதிராக சில குழுக்கள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை நாம் கண்டிக்கின்றோம் ; தயாசிறி - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, August 29, 2013

முஸ்லிம்களுக்கு எதிராக சில குழுக்கள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை நாம் கண்டிக்கின்றோம் ; தயாசிறி

(vi)
முஸ்லிம்களுக்கு எதிராக இந்நாட்டில் சில குழுக்கள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை நாம் கண்டிக்கின்றோம். குறுகிய நோக்கங்கொண்ட சக்திகள் ஒருபோதும் வெற்றியடையப் போவதில்லை. இன வேறுபாடுகளைத் தூண்டி மக்களை தவறான வழியில் திசை திருப்பும் சக்திகளுக்கு வடமேல் மாகாணத்தில் இடமளிக்கப் போவதில்லை என வடமாகாண சபை தேர்தலில் போட்டியிடும் குருநாகல் மாவட்ட வேட்பாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.


கெகுணகொல்லையில் வர்த்தகர் ஏ.எல்.யூசுப் தமையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் நான் தமிழ் பேசும் மக்களோடு நெருங்கிப் பழகி வருகிறேன் தமிழில் நன்கு உரையாடுவேன்.இன,மத பேதமின்றி சேவை செய்வதே எமது நோக்கம்.

ஐ.தே.கட்சியில் எம்.பி. பதவி வகித்த காலத்தில் எம்மால் மக்களுக்கு சேவை செய்ய சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. இதன் காரணமாக பதவியை துறந்து மாகாண சபை தேர்தலில் குதித்துள்ளேன்.

ஐ.தே.கட்சி முற்றாக பலமிழந்துள்ளது. எந்த ஒரு தேர்தலிலும் அக்கட்சி இனிமேல் வெற்றி பெறப் போவதில்லை. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொதுஜன ஐக்கிய முன்னணி கட்சி ஒன்றே இன்றைய நிலையில் நாட்டை முன்னெடுக்கக்கூடிய கட்சியாகவுள்ளது. அபிவிருத்தி யுகம் ஒன்றை கட்டியெழுப்புவதிலேயே இக்கட்சிக்கே பலமுள்ளது.
இந்நாட்டில் உள்ள சிறுபான்மையின மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதில் எமக்கு நம்பிக்கையுண்டு. தற்சமயம் சிறுபான்மையின மக்களுக்கு எதிராக சில குழுக்கள் மேற்கொண்டு வருகின்ற நடவடிக்கைகள் ஒருபோதும் வெற்றியடையப் போவதில்லை. வடமேல் மாகாணத்தில் இவ்வாறான நடவடிக்கைக்கு நாம் ஒரு போதும் இடமளிக்கமாட்டோம் எனவும் கூறினார்.

No comments:

Post Top Ad