ஒபாமா உத்தரவிட்டால் எமது படை சிரியாவைத் தாக்கும் ; சக் ஹெகெல் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, August 28, 2013

ஒபாமா உத்தரவிட்டால் எமது படை சிரியாவைத் தாக்கும் ; சக் ஹெகெல்


சிரியாவுக்கு எதிரான தாக்குதல்களை மேற்கொள்ள தமது படையினர் தயாராகவுள்ளதாக அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் சக் ஹெகெல் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி பரக் ஒபாமாவின் உத்தரவு கிடைக்கப்பெறுகின்ற பட்சத்தில், தாக்குதல்களை தொடுக்கும் வல்லமை தமது படையினருக்கு உள்ளது என பாதுகாப்புச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
சிரியாவில் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி அரச துருப்பினர்கள் தாக்குதல்களை மேற்கொண்டதாக குற்றங்கள் சுமத்தப்பட்டுவரும் நிலையில், அமெரிக்கா கடுமையான தொனியில் கருத்துக்களை தெரிவித்துவருகின்றது.
இந்த நிலையில் சிரியா மீது இராணுவ நடவடிக்கை எடுப்பதற்கு ஒருபோதும் அனுமதிக்க முடியாது என ரஷ்யா கூறியுள்ளது.
இதேவேளை தமது துருப்பினர் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தி தாக்குதல் மேற்கொள்ளவில்லை என்று சிரிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

No comments:

Post Top Ad