புத்தளத்தில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரை (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, August 29, 2013

புத்தளத்தில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரை (படங்கள் இணைப்பு)


புத்தளம் நகரிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் இன்று அதிகாலை 2 மணியளவில் தீ பரவியுள்ளது.

மின்சார இணைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, வர்த்தக நிலையத்தில் தீ பரவி இருக்க கூடும் என பொலிஸார் சந்தேகம் வெயிட்டுள்ளனர்.
இந்த தீ விபத்தில் விற்பனை நிலையம் முற்றாக சேதமடைந்துள்ளதாக பொலிஸார் கூறினார்.
மேலும் தீயினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்காக முயற்சித்த 4 பேர் சிறுகாயங்களுக்குள்ளான நிலையில் புத்தளம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பொதுமக்கள், பொலிஸார் மற்றும் இராணுவத்தினரின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரபப்பட்டதாக புத்தளம் பொலிஸ் நிலைய பொறுப்பாதிகாரி குறிப்பிட்டார்.
இந்த தீ விபத்து தொடர்பில் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


No comments:

Post Top Ad