மெக்சிகோ நீதிமன்றில் நீதிபதிகள் மோதிக் கொண்டதால் பரபரப்பு (வீடியோ இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Saturday, August 31, 2013

மெக்சிகோ நீதிமன்றில் நீதிபதிகள் மோதிக் கொண்டதால் பரபரப்பு (வீடியோ இணைப்பு)


மெக்சிகோ நாட்டில் வழக்கு விசாரணையின் போது நீதிபதி ஒருவர், மற்றொரு நீதிபதியை நையடைப்பு செய்துள்ளார்.
மெக்சிகோ நாட்டின், மோர்லோஸ் நகரில், மேல்முறையீட்டு நீதிமன்றம் உள்ளது.

இந்த நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி, மைக்கேல் ஏஞ்சல் பால்கன். இதே நீதிமன்றத்தில் பணிபுரியும் மற்றொரு நீதிபதி, ரூபன் ஜாசோ.
முக்கிய வழக்கு ஒன்றை, இந்த இரு நீதிபதிகளும், நேற்று விசாரித்தனர். விசாரணை நேரத்தில், ரூபன் ஜாசோவின் செய்கைகள், மைக்கேலுக்கு பிடிக்கவில்லை.
முதலில் ஜாசோவை, முட்டாள் என திட்டினார். அதை தொடர்ந்து, ஜாசோ மீது பாய்ந்து, அவரை நைய புடைத்தார் மைக்கேல்.
நீதிமன்றத்தில், அனைவரது முன்னிலையில் இந்த சம்பவம் நடந்ததால் அங்கு பரபரப்பு நிலவியது.
பின் சுதாரித்து கொண்ட மைக்கேல், தன்னுடைய செய்கைக்காக, நீதிமன்றத்தில் இருந்தவர்களிடம் மன்னிப்பு கேட்டார்.
முக்கிய நீதிமன்றத்தில், மூத்த நீதிபதி மைக்கேல் அநாகரிகமாக நடந்து கொண்டதற்காக அவர் மீது கண்டன தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது.

No comments:

Post Top Ad